அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இவர் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரனிடம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் யூகத்திற்கு எல்லாம் தற்போது பதில் சொல்ல முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலை பொறித்து கூட்டணி குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது வரை தொடர்வதாகவும் அவர் கூறினார். முன்னதாக தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதல் மாநாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார். இதன் மூலம் விஜய் தற்போதே கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படும் நிலையில் தற்போது டிடிவி தினகரன் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.