விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து மாநாடை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. மாநாடு முடிந்த பிறகு தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுப்பதாக கூறினார். இதனால் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி கூட்டணி வைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

விசிக தலைவர் திருமாவளவன் விஜயின் கட்சி கொள்கைகளை விமர்சித்து பேசி இருந்தார். இந்த நிலையில் வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தான் நீடிப்போம். இந்த கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு போக வேண்டிய எந்த தேவையும் விசிகவுக்கு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.