
புனேவில் தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் மக்கள் நடு ரோட்டில் நின்று பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சோஹேம் படேல் (35) சாலையின் நடுவே பட்டாசுகளை வைத்து வெடிக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று வேகமாக மோதியது.
இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் நிற்காமல் சாலையில் இருந்து வேகமாக சென்றுவிட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
रस्त्यावर फटाके उडवताना भरधाव कारने चिरडलं, तरुणाचा जागीच मृत्यू, पुण्याचा धक्कादायक Video#pune #reportertodaynews #accident #Diwali #Death pic.twitter.com/EGKyoH3dWo
— Reporter Today News Channel (@reportertoday88) November 3, 2024