மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கும் அவரது மற்ற இரண்டு சகோதரர்கள் தந்தைக்கும் இடையே சொத்து தொடர்பான தகராறு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை துப்பாக்கி சூடு நடத்தியதால் சிவராஜின் தந்தையும் ஒரு சகோதரரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் சிவராஜ் அவரது மற்றொரு சகோதரர் ராம்ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிவராஜ் படுத்திருந்த படுக்கையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து விட்டு செல்லுமாறு ரோஷினியிடம் கூறியுள்ளனர். சிவராஜின் மனைவி ரோஷினி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவரை இழந்த துக்கத்தில் என்ன செய்வது என்று அறியாமல் ரோஷினி படுக்கையை சுத்தம் செய்து குப்பைகளை குப்பை தொட்டியில் போட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த பெண்ணிடம் யாரும் சுத்தம் செய்ய சொல்லவில்லை. இறந்தவரின் மனைவி படுக்கையில் இருந்து ரத்தத்தை ஒரு துணியால் துடைக்க அனுமதிக்குமாறு எங்களிடம் கேட்டார். அவர் அதை ஆதாரமாக பயன்படுத்தலாம் என நினைத்து அனுமதி கொடுத்தோம். நாங்களாகவே படுக்கையை சுத்தம் செய்யும்படி அவரிடம் கூறவில்லை என விளக்கம் அளித்தனர். அந்த விளக்கம் நம்பும் படியாக இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.