
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடந்து முடிந்த பிறகு அரசியலில் பல மாற்றங்கள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்தார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி பிரபலங்கள் விஜயை பற்றி பேசுவது தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது.
அதிலும் குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவன் விஜயின் பேச்சை விமர்சித்தார். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் குறித்து தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது. அந்த விழாவில் திருமாவளவனின் விஜயும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.