ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருப்பு விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படுவது வழக்கம்தான். அந்த வகையில், விருதுநகரில் உள்ள வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே வேலையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயிறு ஆகியவற்றின் விலை சற்று சரிந்துள்ளது. விருதுநகர் வணிக சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பட்டியல் இதோ.

பாமாயில் 15 கிலோ டின் கடந்த வாரம் 240 க்கு விற்கப்பட்டது, ஆனால் இந்த வாரம் சற்று குறைந்து 2030க்கு விற்கப்படுகிறது. நாட்டு மல்லி கடந்த வாரம் 40 கிலோ, 4000 முதல் 4200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் 3500 முதல் 4000 வரை விற்கப்படுகிறது. நாட்டு துவரம் பருப்பு 100 கிலோ 10,500 விற்கப்பட்டது, இந்த வாரம் 10,800 விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் 14,000 முதல் 14 700 வரை விற்கப்பட்டது, இந்த வாரம் 14500 முதல் 15500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ 12,350 க்கு விற்கப்பட்டது, கடந்த வாரம் இந்த வாரம் 12,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உளுந்து லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் 9,300 முதல் 9500 வரை விற்கப்பட்டது, இந்த வாரம் 8500 முதல் 9000 வரை விற்கப்படுகிறது. வெள்ளை பட்டாணி பருப்பு கடந்த வாரம் 4000 முதல் 4200 வரை விற்பனையானது, இந்த வாரம் நான் 4200 முதல் 4300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பாசிப்பயிறு நாட்டு வகை 100 கிலோ கடந்த வாரம் 8400 முதல் 8700 வரை விற்கப்பட்டது இந்த வாரம் 7850 முதல் 8,150 வரை விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் 4600 க்கு விற்கப்பட்டது, இந்த வாரம் 4400 க்கு விற்கப்படுகிறது. எள்ளு புண்ணாக்கு 50 கிலோ 1800க்கு விற்பனையானது, இந்த வாரம் 2200 விற்பனை செய்யப்படுகிறது. மற்ற அத்தியாவசிய பொருட்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.