பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய் தனது கட்சி கொள்கைகள், நோக்கம், மக்கள் நலன் குறித்து பேசினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

முன்னதாக பாஜக மாநில செயலாளர் வினோத் பி செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் விஜய் திமுக-வுக்கு கிளை கட்சியாக செயல்படுகிறார். அவர் ஏ டீம், பீ டீமை சேர்ந்தவர் என விமர்சித்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக மாநாட்டில் பேசிய விஜய், ரிரோல்கள், ஆபாச வதந்தி என அல்லு, சில்லுகளை வைத்து அவதூறு பரப்புவது. A team, B team என முத்திரை குத்தி இப்படையை வீழ்த்தலாம் என யாரும் கனவு காணாதீர்கள் என ஆவேசமாக பேசினார்