மாணவி ஒருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தியில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது டெல்லியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சமீபத்தில் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி தேர்வில் தோல்வியடைந்தார்.

இதனை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் இந்த தோல்வி தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகவும் அவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென தனது வீட்டில் உள்ள ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஏற்கனவே தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மாணவி அவருடைய தாயிடம் கூறியது தெரியவந்தது. மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.