தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜயின் முதல் மாநாடு வெற்றிபெற அதிமுக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதேபோன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது விசிக கட்சியின் எம்எல்ஏ ஆளூர்‌ ஷாநவாஸ் தற்போது நடிகர் விஜயை விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் விஜய் சமூக நீதி பார்வை கொண்டவர் என்றும் அவர் சரியான பாதையில் செல்கிறார் என்றும் அவருடைய மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அவரின் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லாதவர்கள் வேறு வழியில்லாமல் விஜயின் பின்னால் போகலாம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு திமுகவுக்கு எதிராக தீவிர அரசியலை தமிழக வெற்றி கழகம் கையில் எடுத்தால் அதிமுகவின் கதி அதோ கெதி தான் என்று கூறியுள்ளார். மேலும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறிய அவர் முரண்பாடுகள் இல்லாத மற்றும் முறியாத கூட்டணி என்ற ஒன்று அரசியலில்  கிடையாது என்று தெரிவித்தார். ஏற்கனவே திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் தற்போது முடியாத கூட்டணி என்று ஒன்று கிடையாது என அவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.