
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியனை சேர்ந்த கொம்பன்குளம் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில், ‘கிராம நிர்வாக அலுவலக விலைப்பட்டியல்’ என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. இதில், பல்வேறு சான்றிதழ்களை பெற, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று விவரிக்கப்பட்டிருந்தது. ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றுக்காக 200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதோடு, பட்டா மற்றும் சிட்டா போன்ற ஆவணங்களுக்கான கட்டணம் மற்றும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
போஸ்டரில், பிரபாகனி என்ற வி.ஏ.ஓ. அலுவலக அலுவலரின் தொடர்பு எண் மற்றும் ஜி-பே மூலம் பணம் செலுத்துமாறு விளக்கப்பட்டிருந்தது. மேலும், கடன் வசதி கிடையாது என குறிப்பிட்டிருந்தது. இந்த தகவல் குறித்து வருவாய்த் துறையினர் உடனடியாக போஸ்டரை அகற்றினர். இதுகுறித்த புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.