மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம், சில இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற போது ஏற்பட்டது. ஜெய்த்பூர் மற்றும் கோபாரு காடுகளில் சுற்றுலாவிற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா மற்றும் நந்தினி சிங் ஆகியோர், காடு மற்றும் அப்பகுதியை ஆராய்வதற்காக செல்போன் மூலம் சில நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர். அவர்களுடன் சுமார் 50-60 பேர் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

இளைஞர்கள் காட்டு பகுதிக்குள் இருந்தபோது, புதருக்குள் மறைந்திருந்த ஒரு சிறுத்தையை “வா.. வா” என்று விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர். திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை, இவர்களை தாக்கியது. சிறுத்தையின் தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23), மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இந்த திடீர் சம்பவம் அந்த சுற்றுலாவிற்கு வந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.