அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. குறிப்பாக எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சில முன்னால் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னதாக சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதன் எதிரொலியாக தான் தற்போது வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 நேர்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.