
தமிழ்நாடு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 வரவு வைக்கப்படுகிறது. இந்த பணம் பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் நிலையான ஒரு வைப்புத் தொகையாக வரவு வைக்கப்படும். அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியுடன் வட்டியுடன் சேர்த்து அந்த தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இது அவர்களின் கல்வி மற்றும் திருமண போன்றவைகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த பணம் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பிக்கப்படும்.
இந்த பணத்தை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்வது அவசியம். இந்நிலையில் பெண் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு 6-வது ஆண்டிலிருந்து மாதந்தோறும் 1800 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த நிதி உதவியை பெற விரும்ப அவர்களின் ஆண்டு வருமானம் 72000 க்குள் இருப்பது அவசியம். அதன்பின் பெற்றோரில் இருவர் ஒருவர் 40 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இந்த உதவி தொகையை பெற அருகில் உள்ள ஆன்லைன் சென்டரில் விண்ணப்பிக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு 3 வயது ஆவதற்கு முன்பாகவே இந்த பணத்தை பெற விண்ணப்பித்து விட வேண்டும்.