சேலம் மாவட்டம் எருமபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பாமக கட்சியினர் கொடிக்கம்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் பாமக கொடி கம்பத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்தால் தான் கூறப்படும் நிலையில் பாமக கட்சியினர் அதே இடத்தில் புதிதாக ஒரு கொடி கம்பம் நட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அனுமதி இன்றி கொடிக்கம்பம் நடக்கூடாது என்று கூறினர். இருப்பினும் பாமகவினர் எதிர்ப்பை மீறி ‌ கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததோடு தமிழக வெற்றி கழகத்தினர்கள் எதிராக அந்த இடத்தில் திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிகழ்ந்தது.