சிறியவர்கள் பெரியவர்கள் வரை கேக் பிரட், சாக்லேட் போன்ற பேக்கரி உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகரில் இருக்கும் பேக்கரிகளில் தரம் இல்லாத கேக் மற்றும் பிரடுகள் தயார் செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆழ்வார்தோப்பு, ஓ பாலம் பகுதிகளில் இருக்கும் பேக்கரிகளில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது 8000 அழுகிய முட்டைகள் இருந்தது தெரியவந்தது.

நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை கொள்முதல் செய்து பயன்படுத்தி உள்ளனர். அழுகிய முட்டைகள் 215 கிலோ கேக் மற்றும் பிரட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 2 பேக்கரிகளின் உரிமத்தை ரத்து செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர். பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உணவு தயார் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.