தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பலர் குடும்பத்தோடு வந்து பெரியசாமிபுரம் கடலில் குளித்த மகிழ்ந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 5 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு 5 பேரையும் மீட்டனர்.

அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது முருகேச மகளான 21 வயதுடைய இலக்கியா, செல்வகுமாரின் மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லட்சுமி, ஸ்வேதா, அனிதா ஆகிய மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.