
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நகர்புறங்களில் ஒயிட் போர்டு பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம். இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழகப் போக்குவரத்து கழகம் நீல நிறப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தற்போது அறிவித்துள்ளது. இந்த புதிய நீல நிற சொகுசு பேருந்துகள் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய பேருந்துகளிலும் இனி பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.