
பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வியாதி உலகின் இரண்டாவது நபருக்கு வந்துள்ளது. இவருக்குத்தான் இரண்டாவது முறையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதன் பெயர் மருத்துவ உலகில் டிரிஃபாலியா என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் ஒருவருக்கு இந்த வியாதியை முதலில் மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில் தற்போது மற்றொருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு அரிய வகை பிறவி குறைபாடு ஆகும். அதாவது அப்போது குழந்தை ஒன்று 3 ஆண் குறிகளுடன் பிறந்தது.
இந்நிலையில் பர்மிங்காம் மருத்துவப் பள்ளியில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 78 வயது முதியவரின் உடல் ஒன்று தானமாக வழங்கப்பட்டுள்ளது. அவரின் உடலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது தான் அவர் தன் நிலை அறியாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே இந்த வியாதி கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக இரண்டு ஆண் குறிகள் கூட சிலருக்கு இருக்குமாம். இது குறித்த ஆய்வில் இதுவரை ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் அதன்படி ஒருவருக்கு தனித்தனியாக 3 ஆண்குறி தண்டுகள் இருக்குமாம். இது ஒரு அரிய வகை பிறவி நோய் என்று வகைப்படுத்தப்படுகிறது.