
இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை கொடுக்கவில்லை. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவது பிற மொழிகளை சிறுமிப்படுத்தும் முயற்சி.
சென்னை தொலைக்காட்சி நிலைய பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாதம்நிறைவு நாள் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.