
ஆவின் கிரீன் மேஜிக் பாலின் பெயரில் பிளஸ் என சேர்த்து உறையை மாற்றி லிட்டருக்கு 11 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை கைவிட வேண்டும். கிரீன் மேஜிக் பால் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் கிரீன் மேஜிக் பிளஸ் 900 மில்லி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 44 ரூபாய் பாலை நிறுத்தி விடுவது தான் ஆவின் நிறுவனத்தின் திட்டமாக இருப்பதால் இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.