
வருகிற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 6 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு அணியும் எந்தெந்த 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்று வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா வேறொரு அணி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியில் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த 4 வீரர்களின் ரோகித் சர்மா நிச்சயம் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. அதோடு ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சார்பாக விளையாடுபவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் 2024 மும்பை அணி 14 போட்டியில் விளையாடியது. ஆனால் 4 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று கடைசி இடத்தை பிடித்தது.