
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக இன்று (அக். 16) உமர் அப்துல்லா பதவியேற்றார். 2019இல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, இப்பிரதேசத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி (NC) வெற்றி பெற்றது.
அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய துணை கண்டத்தில் தென்முனையில் உள்ள தமிழ்நாடும், வட முனையில் உள்ள ஜம்மு காஷ்மீரும் ஜனநாயக போராட்டத்தில் இணைந்து பயணிப்போம் என கூறியுள்ளார்.