
மத்திய பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில், ஒரு டீக்கடைக்காரர் தனது புதிய மொபட் வாங்கியதை கொண்டாட 60,000 ரூபாய் செலவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராரி சாய்வாலா எனும் இந்த டீக்கடைக்காரர், தனது மொபட் வாங்குவதற்காக 20,000 ரூபாய் முன்பணம் செலுத்தியபின், மீதியை கடனில் பெற்றுக்கொண்டார்.
முராரி, தனது புதிய மொபட்டை வரவேற்க இசைக்குழுவை அழைத்து ஊர்வலமாகச் செல்ல முடிவு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பேண்டு வாத்தியக்குழு மற்றும் கிரேன் ஆகியவை இடம் பெற்றது. அவர் தனது மொபட்டை கிரேன் மூலம் தூக்கி, ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளார். இதற்காக அவர் 60,000 ரூபாய் செலவு செய்துள்ளார். உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி போலீசார், அந்த ஊர்வலத்தை பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டனர். முராரி, கடந்த ஆண்டு புதிய மொபைல் போனையும் கடனில் வாங்கியபோது, அதற்காக கொண்டாட்டம் செய்திருந்தார்.