பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் ‌ மத்திய அரசால் வழங்கப்படும் நிலையில் இதுவரை 18 தவணை தொகைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 18 ஆவது தவணைத்தொகை பணம் 2000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் இந்த பணம் இன்னும் சில விவசாயிகளை சென்றடையவில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பணம் கிடைக்காத விவசாயிகள் உடனடியாக இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். கடந்த 5-ம் தேதி பணம் விடுவிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள வீட்டில் இருந்தபடி பி.எம் கிஷான் அதிகாரப்பூர்வை இணையதளத்திலோ அல்லது பொது சேவை மையத்திற்கு நேரில் சென்ற உடனடியாக இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம்.

இதற்கு முதலில் பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று Beneficiary list என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மாநிலம், மாவட்ட மற்றும் கிராம உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு get report என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயனாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதைத்தொடர்ந்து பி.எம் கிசான் ஹெல்ப்லைன் டெஸ்க் மூலம் புகார் தெரிவிக்கலாம். இதற்கு [email protected], [email protected] என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம். அல்லது 011-24300606, 155261 என்ற தொலைபேசி நபர்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் அல்லது பி.எம் கிசான் இலவச டோல் ஃப்ரீ நம்பர் ஆன 1800-115-526 என்ன நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.