டெஸ்ட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக வங்கதேசத்தை வீழ்த்தி  இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் பெங்களூரு, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட தொடர் என்பதால் கண்டிப்பாக நியூசிலாந்து மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் வெற்றியை முன்னோக்கி கடுமையாக விளையாடும்.

இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துணை கேப்டன் இல்லாமல் இந்திய அணி விளையாடிய நிலையில் தற்போது துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஆகாஷ் தீப், முகமது சிராஜ், குல்திப் யாதவ், அக்சர் படேல், அஸ்வின், ஜடேஜா, துருவ ஜூரேல், ரிஷப் பண்டு, சர்ப்பராஸ் கான், கே எல் ராகுல், விராட் கோலி மற்றும் சுபமன் கில் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த போட்டி வருகிற 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.