சீனாவை சேர்ந்த சோபியா அலோன்சோ-மோசிங்கர் என்ற 18 வயது பெண் செயின் என்ற ஆன்லைன் தளத்தில் தனக்கு பூட்ஸ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அவரது பார்சல் வீட்டிற்கு வந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் உள்ளே ஒரு தேள் இருந்துள்ளது.

முதலில் சோபியா அதனை பொம்மை என்று நினைத்துள்ளார். ஆனால் அந்த விஷத்தன்மை கொண்ட தேள் நகர்ந்தவுடன் அவர் மிகவும் பயந்துவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த தேளை பிளாஸ்டிக் டப்பா ஒன்றுக்கு மாற்றி உள்ளனர்.

தேளை அப்புறப்படுத்துவதற்கு ஆட்கள் வரும் வரை விலங்கியல் மாணவரான ஆலிவர் ஜேம்ஸ் என்பவர் தேளுக்கு தண்ணீர் கொடுத்து கவனமாக பார்த்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் ஆன்லைன் நிறுவனமான செயின் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.