
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நாகர்கோவிலில் வசிக்கும் ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழாசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜார்ஜ் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்கவில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பேராசிரியரை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது ஜார்ஜ் ஹென்றி பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி ஜார்ஜ் ஹென்றியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.