கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த பரபரப்பு சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, BMTC பஸ்சில் ஹர்ஷ் சின்ஹா என்ற 25 வயது இளைஞர், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனைக் கவனித்த பஸ் கண்டக்டர் யோகேஷ், படிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் கண்டக்டரின் அறிவுரையை கேட்காமல், அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன் பையில் வைத்திருந்த கத்தியை உருவி, கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார். மேலும் பஸ்சில் பயணித்த மற்ற பயணிகளையும் கத்தியால் தாக்க முற்பட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார்.

உடனே பஸ் ஓட்டுநர் சம்யோஜித்தாக பஸ்சின் கதவை ஆட்டோமேட்டிக் முறையில் பூட்டி, பஸ்சில் மாட்டிக்கொண்ட இளைஞரை வெளியேறவிடாமல் செய்தார். கோபத்தின் உச்சத்தில் அந்த இளைஞர் பஸ்சை சேதப்படுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.