
சுரண்டை அருகே கிரைண்டர் செயலி மூலம் ஒரு வாலிபரை மிரட்டி, பணம் பறித்த 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நபர், கிரைண்டர் செயலி மூலம் இணைந்த பின்னர், ஆசை வார்த்தைகளால் அவரை காட்டுப் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு சென்றவுடன், மர்ம நபர்கள் அவரை வீடியோ எடுத்து மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். இதையடுத்து, அந்த நபர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனின் உத்தரவின் பேரில், சுரண்டை காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையில் சிறப்பு தனிப்படை நடவடிக்கை எடுத்து, செல்போன் கேமரா மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண்ந்து 9 பேரை கைது செய்தனர். அவர்கள் விரோத செயல்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிந்தது. அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், 2 அரிவாள்கள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 20,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

இதோடு, மற்றொரு குற்றவாளி லட்சுமணனை தேடி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மக்கள் சமூக வலைதளங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், இவ்வகையான குற்றச்செயல்களை உடனடியாக காவல்துறைக்கு புகார் செய்ய மாநில மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.