குஜராத் மாநில அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வஸ்திரபூர் பகுதியில் அமைந்துள்ள மகாதேவ் பெட்ரோல் பம்பில் நிலேஷ் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரண்டு பெண்கள் பெட்ரோல் போடுவதற்காக பங்க்கு வந்த சமயம் செல்போன் உபயோகித்ததாக கூறப்படுகிறது.

இதனால் நிலேஷ் அந்த பெண்களிடம் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செல்போனை ஆஃப் பண்ணுமாறு கூறியுள்ளார். இதனால் அந்த இரண்டு பெண்களும் நிலேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவ்விடத்தை விட்டு புறப்பட்ட பெண்கள் சிறிது நேரத்தில் வேறு சில ஆண்களுடன் வந்து நிலேஷிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் நிலேஷ் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.