அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் எவ்வளவு ரூபாய் செலவு செய்யலாம் என்பது குறித்து பிசிசிஐ முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்றும் ஒரு போட்டிக்கு வீரர்களுக்கு 7.5 லட்சம் வரை சம்பளத்தை உயர்த்தியும் அறிவித்துள்ளது. இதில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் நிலையில் ஆர்டிஎம் என்ற முறையின் மூலம் கூடுதலாக ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதாவது ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை மற்றொரு அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் ஆர்டிஎம் என்ற முறையினை பயன்படுத்தி அந்த தொகையை கொடுத்து அந்த வீரரை மீண்டும் அதே அணி தக்க வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு ஏலத்தின் போது வீரர்களை வாங்குவதற்கு 120 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டும் என்று பிசிசிஐ  முடிவு செய்துள்ள நிலையில் இது கடந்த வருடத்தை விட 20 கோடி ரூபாய் அதிகமாகும்.

ஒரு அணி ஏலத்தில் 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்கு மொத்தம் 75 கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்தத் தொகை போக மீதமுள்ள 45 கோடியை வைத்துதான் எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். இதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் அதாவது இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கடந்த ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது இன்னிங்ஸின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனாலும் இந்த விதிமுறை அடுத்த ஐபிஎல் சீசனிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன் பேக்ட் பிளேயர் குறித்த விதிமுறை வெளியாகியுள்ளது. இந்த விதிமுறையின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் தோனியை சேர்க்கப்படாத வீரராக வைக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்களான வீரர்கள். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் எம்.எஸ் தோனியை அன் பேக்ட் வீரராக தக்கவைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இதன் காரணமாக தற்போது எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.