
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கடலூர் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. பண்ருட்டி வட்டம் மாளிகைமேடு ஊராட்சியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவரது மீது 2021ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணை முடிவில், கடலூர் போக்ஸோ நீதிமன்றம் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்ததுடன், 1 லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்தத் தவறினால் கூடுதல் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி லட்சுமி ரமேஷ் உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.