தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி  போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் வருகிற 30-ஆம் தேதிக்குள் குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டும் என தற்போது சென்னை குடிநீர் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து அலுவலகங்களும் அனைத்து வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு காசோலை மற்றும் வரை ஓலைகளாக வரி செலுத்தும் நுகர்வோர்கள் வசதிகளுக்காக அந்தந்த அலுவலகங்களிலேயே காசோலைகளை பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ‌https://bnc. Chennaimetrowater.in/#/public/cus-login என்ற இணையதள முகவரியிலும் கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் இணையதள வங்கி மூலமாக செலுத்தலாம். மேலும் யுபிஐ, க்யூ கோடு ஸ்கேன், இ சேவை மையங்கள் போன்றவற்றை பயன்படுத்தியும் வரி செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.