
சினிமாவில் தயாரிப்பாளராகவும் முக்கிய நடிகராகவும் மேலும் திரைப்படத்துறை சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால் திருச்சி ஆதீனத்துடன் இணைந்து திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்றார். மேலும் அவர் அலங்கார தீபாரணை, மூலவர் பூஜை, சத்குரு மூர்த்தி, சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.வெளியில் உள்ள சண்முகர் மண்டபத்தில் நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்த பின்பு அங்கிருந்து ஆதி இனத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
கோயிலின் வெளியே வந்த அவரை பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர் பலரும் நடிகர் விஷாலோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் “முருகனை பார்க்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்” என கூறினார்.பின்பு அவர் அங்கிருந்து மின்னியக்க ஊர்தியில் ஆதினத்துடன் கிளம்பினார்.