
தமிழக முழுவதும் கூல் லிப் எனும் போதை பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கூல் லிப்பை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜிஎஸ்டியும் பெறப்படுகிறது என்று வேதனையுடன் மதுரை கிளை நீதிபதி பத்ரசக்கரவர்த்தி கூறினார்.
மேலும் கூல் லிப்பிற்கு அதிகமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர். இத்தகைய போதைப் பொருளால் மாணவர்களிடையே வன்முறையும் அதிகரித்து வருகிறது. எனவே கூல் லிப்பை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்று மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.