
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் ஜாம் கேட் அருகே ராணுவ வீரர்கள் துப்பாக்கி பயிற்சி பெறும் மையம் அமைந்துள்ள நிலையில் இங்கு பயிற்சி பெறும் இரு ராணுவ வீரர்கள் அந்த மையத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களுடன் இரு பெண்களும் சென்ற நிலையில் 8 பேர்கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் பெண்களிடமிருந்த செல்போன் மற்றும் நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்த நிலையில் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதாவது ராணுவ வீரர்களை கட்டிப்போட்டு அவர்களை மிரட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒரு ராணுவ வீரர் மற்றும் பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு மற்றொரு ராணுவ வீரரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வருமாறு அவர்கள் மிரட்டியதால் பயந்துபோன அவர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் அங்கு சென்ற நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குறித்து எக்ஸ் பதிவில், பாஜகா அளும் மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டது மற்றும் அவர்களுடன் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்தும் செயல். இதற்காக வெட்கப்பட வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுவிட்டது. பாஜக அரசின் எதிர்மறையான அணுகுமுறை மிகவும் கவலை அடைகிறது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு பற்றிய சூழலை நினைத்து சமூகமும் அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.