தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க தனது ஊழியர்களுக்கு டேட்டிங் செல்ல சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளித்துள்ளது. இந்த புதுமையான முயற்சி, ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஒருபுறம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைத்து, அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்த முயற்சி உதவும் என நம்பலாம். இதுபோன்ற முயற்சிகள், வேலை செய்யும் இடத்தில் நேர்மறையான சூழலை உருவாக்கி, ஊழியர்களின் மனதில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தும்.

மறுபுறம், இந்த முயற்சியின் நோக்கம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டு, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, டேட்டிங் செல்லும் வாய்ப்பை வழங்குவது என்பது தற்காலிக தீர்வாகவே பார்க்கப்படலாம். மேலும், இந்த முயற்சி, ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறுவனம் தலையிடுவது போல் உள்ளதாகவும் டேட்டிங் செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை அதில் இப்படியான சலுகை என்ற பெயரில் தலையிடுவது முறையல்ல என பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.