தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் கைது செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 8 பேரை நேற்று இரவு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர்.

அதாவது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னார் பகுதிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற விசை படகுகளையும் பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளது.