தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் நெல்சன். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி 600 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருடைய மனைவி மோனிஷாவுக்கு சம்பந்தம் இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதாவது ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்போ  செந்தில் ஆதரவாளரான மொட்டை கிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்ததாக கூறி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மொட்டை கிருஷ்ணனுக்கு காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக தற்போது இயக்குனர் நெல்சனிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்‌. மோனிஷா மற்றும் மொட்டை கிருஷ்ணன் இருவரும் கல்லூரி நண்பர்கள் எனவும் இருவரும் செல்போனில் பேசியதாகவும் தகவல் வெளிவந்ததை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தற்போது இயக்குனர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.