அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை வானில் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விண்வெளியில் ஒரு மணி நேரத்திற்கு சரியாக ஒரு மில்லியன் மைல் வேகத்தில் நகரும் ஒரு மர்ம பொருளை கண்டறிந்துள்ளது. இந்த பொருளானது பால்வெளியை விட்டு சரியாக ஒரு மில்லியன் மைல் தூரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இது பிளான்ட் 9 என்ற திட்டத்தின் கீழ் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு விஞ்ஞானிகள் CWISE J1249 என்று பெயர் வைத்துள்ளனர். இதனை விண்கல் என்றோ நட்சத்திரம் என்றோ உறுதியாக விஞ்ஞானிகளால் வகைப்படுத்த முடியவில்லை. இந்த பொருளின் மையத்தில் ஹைட்ரஜன் காணப்படவில்லை. மேலும் இதனை வாயு நிறைந்த ராட்சச கிரகம் என்றும் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் என்றும் இரண்டு வரையறைக்கு இடைப்பட்ட பொருளாக பொருளாக வகைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.