தமிழகத்தில் இன்று எம்பிபிஎஸ் மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படிப்புகளுக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வருகின்ற 21ஆம் தேதி மருத்துவ குழு மூலமாக தமிழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இதற்கான தரவரிசை பட்டியலை இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.

இந்நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கிய பிறகு 7.5% சதவீதத்திற்கான அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு பட்டியல், முன்னாள் ராணுவத்திற்கான இட ஒதுக்கீடு பட்டியல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு ‌ என 4 பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும். இதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பொது கலந்தாய்வு நடைபெறும். மேலும் தமிழகத்தில் 9050 எம்பிபிஎஸ் மற்றும் 2200 பிடிஎஸ் இடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.