உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்கள் கட்டியிருந்த சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதோடு அனைவரது உடல்களும் ஒரே மாதிரியாக கரும்பு தோட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு அனைவரும் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இதனால் இந்த கொலைகளை செய்தவர்  ஒருவர்தான் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலைகள் கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் அரங்கேறிய நிலையில் தற்போது காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதங்களில் 8 கொலைகள் நடைபெற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் கடைசியாக அனிதா என்ற 9-வதாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் உள்ளூர் மக்கள் சொன்ன அடையாளங்களின் படி 3 பேரின் உருவப்படங்களை வரைந்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை வைத்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.