மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் வானிலை மையம் அங்குள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலார்ட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தானே மாவட்டத்தில் நேற்று  அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வந்துள்ளது. அதோடு அங்கு பலத்த சூறைக்காற்று வீசி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடையின் மேல் பொருத்தப்பட்டு இருந்த விளம்பரப் பலகை ஒன்று பலத்த காற்று  வீசியதால் கீழே  விழுந்தது. அந்த விளம்பர பலகை சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மேல் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான  வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.