
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் வாடிக்கையாளர்களை தவிர புதுத்திட்டங்களை அறிமுகம் செய்தும் வருகிறது. இந்த நிலையில் ஜியோ நிறுவனம் புதிதாக மாதாந்திர திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது 319 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம் பெற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக மாதத்திற்கு ஒருமுறை மட்டும் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் போதுமானது. அதாவது இந்த மாதம் ஐந்தாம் தேதி ரீசார்ஜ் செய்தால் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ரீசார்ஜ் செய்தால் போதும்.