
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 1970களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் இன்றுவரை இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் ராம்சரனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவருடைய மனைவி இருவரும் ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் நடந்த சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் சிரஞ்சீவியுடன் செல்பி எடுக்க வந்தார். அவரை திடீரென நடிகர் சிரஞ்சீவி தள்ளிவிட்டுவிட்டார். அதன் பின் எதுவும் நடக்காதது போன்று அங்கிருந்து சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக நடிகர் நாகார்ஜுனாவுடன் ஏர்போர்ட்டில் செல்பி எடுக்க வந்த மாற்றுத்திறனாளி ரசிகரை பாதுகாவலர் ஒருவர் தள்ளிவிட்ட நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகர் நாகார்ஜுனா அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
Chiranjeevi Rude Behaviour with Fans Airport @KChiruTweets
మీరు పెద్ద హీరో కావొచ్చు కానీ సామాన్య జనం మీ సినిమాలు చూస్తేనే మీరు ఈ స్థాయిలో ఉన్నారు అని మరిచిపోతే ఎలా గురువు గారు..#Chiranjeevi @IndiGo6E pic.twitter.com/plozmtrw6t
— South Digital Media (@SDM_official1) July 30, 2024