பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார் என்றும் அதன்படி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.