
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பட திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கின்றது.
அந்த நிலையை மாற்றுவதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கலாம் என்பதால் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் அனைத்து கடைப்பிடிப்புகளையும் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம் நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளையும் நடத்தி வைக்கவும் தீர்மானித்துள்ளது.