
டி20 உலகக்கோப்பை சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக வெற்றி பெற்றது. இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பும்ரா விக்கெட் எடுத்தார். குறிப்பாக 16 வது மற்றும் 18வது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு ஆகினார்.
இவர் அண்மையில் நடந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் தன் மனைவியுடன் பங்கேற்றார். அங்கு அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.