
நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலமாக ஏராளமானோர் பயன் பெறுகிறார்கள். அந்த வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு மாநில அரசுகள் ரேஷன் அட்டை வழங்குவது அவசியம். அதன்படி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளிகள் இ-ஷ்ரம் என்ற போர்டலில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் பல மாநிலங்கள் இந்த போர்டலில் பதிவு செய்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதி இ-ஷ்ர்ம் போர்ட்டலில் விண்ணப்பித்தவர்களுக்கு சரி பார்ப்பை உடனடியாக முடித்து ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதோடு ரேஷன் கார்டுகள் வழங்க தாமதமானதற்காக மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக அந்த செயல்முறைகளை முடித்து 4 வரங்களுக்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் புலம்பெயர்த்த தொழிலாளர்களின் சரிபார்ப்பை தெலுங்கானா மற்றும் பீகார் மாநிலங்கள் மட்டுமே 100% முடிந்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.