மகாராஷ்டிர மாநில அரசின் சார்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த திட்டத்தின் கீழ் 18-35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மகாராஷ்டிராவில் வசித்தால் மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.
குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி மற்றும் முதுகலை முடித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் ரூபாயும், ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சி ரூ.8 ஆயிரமும், பட்டம்/முதுநிலை தேர்ச்சி மாதம் ரூ.10 ஆயிரமும் பெறலாம்.
